in ,

6 மாதங்களான குழந்தை கொரோனாவால் சாவு!

6 மாதங்களான குழந்தை கொரோனாவால் சாவு.

வவுனியாவில் 6 மாதங்களான குழந்தை கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தது.

குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் குழந்தையை வவுனியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், கொரோனாத்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையின் கொரோனா விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. எனினும், சிகிச்சை பயனளிக்காது நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வயதான பெண்ஒருவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலராக மீண்டும் பெரும்பான்மையினத்தவர்!

139 கிலோகிராம் கஞ்சாவுடன் பருத்தித்துறையில் இருவர் கைது!