குற்றம்யாழ்ப்பாணம்

6 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் சிக்கியது!! – நெல்லியடியில் இருவர் கைது!!

ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை நெல்லியடி, மாலு சந்தியில் சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 33 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் காங்கேசன்துறை, அந்தோனிபுரம் மற்றும் பருத்தித்துறைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 818 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அதன் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபா என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,195