கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version