கிழக்கு மாகாணம்செய்திகள்

ஹெரோய்னுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது மக்களடி வீதி, வாழைச்சேனை-4 எனும் முகவரியில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 11 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற நடவடிக்கைகாக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051