in ,

இன்றைய நாள் இராசி பலன்கள்

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 21ம் திகதி, ஷவ்வால் 10ம் திகதி, 03.6.2020 புதன்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 7:38 வரை, அதன்பின் திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 7:55 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
  • ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
  • எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
  • குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
  • பரிகாரம் : பால்
  • சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
  • பொது: முகூர்த்தநாள், பிரதோஷம், சிவன் வழிபாடு, வாஸ்து காலை 9:58 – 10:34 மணி

மேஷம்: எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. கணவருக்கு தாழ்வு மனப்பான்மை தலைதூக்க விடாமல் தைரியம் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகபணியாளர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் திருப்திகரமாகும்.

ரிஷபம் : கடினமான செயல்களை எளிதாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னை தீர்வதற்கு வழிபிறக்கும். கலைஞர்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம் : அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வர். சிறு சிறு பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரிகளுடைய முயற்சிகள் அனைத்தும் தாமதமாகவே பலன் தரும்.

கடகம்: குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல ஆலோசனைகளை தந்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் புகுந்த வீட்டின் பெருமையை பாதுகாப்பர்.

சிம்மம் : முக்கியப் பிரபலங்களின் மூலம் நன்மை அடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய திட்டங்கள் மூலம் பலரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி அடைவர்.

கன்னி: பகை பாராட்டிய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை உங்களின் முன்னோடிகளிடம் இருந்து கற்றுக் கொள்வீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.

துலாம்: பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறைகாண்பர். கலைஞர்களின் திறமைக்கேற்றபடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம் : மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் தகுந்த ஆலோசனைகள் கிடைப்பதால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான திருப்பம் உண்டு. உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

தனுசு: எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும். வேலையில் நல்ல இட மாற்றம் ஏற்படும். எடுத்த செயல்கள் தாமதப்படுகிறதே என்று கவலை கொள்ள வேண்டாம். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.

மகரம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பெண்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். வீட்டில் உள்ளவர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

கும்பம் : பூர்வ சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மீனம்: உறவினர்களிடையே இருந்த பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் மனவருத்தம் நீங்கும். விரும்பிய வேலை கிடைக்கும். பணியாளர்களின் கடுமையான உழைப்பு நல்ல பலன் தரும். கலைஞர்கள் புதிய திருப்பங்களை காண்பர்.

வரலாற்றில் இன்று- (03.06.2020)

வவுனியா விபத்தில் இருவர் பலி!