செய்திகள்பிரதான செய்தி

வாகனங்களின் விலை சடுதியாக வீழ்ச்சி! 

சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகின்றது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்று  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிப்பாகங்கள், வாகன திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளது  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282