செய்திகள்

62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை

கல்வி அமைச்சின் கீழ் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்குப் புதிதாக ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவைக்கு முன்வைக்கத் தேவையான நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குள் முன்னெடுக்குமாறு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு, கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (05) பரிந்துரைத்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியிருப்பதால் இது பற்றி மீண்டும் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

கடந்த 62 வருடங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, 4971 பேர் ஆசிரிய ஆலோசகர் சேவையில் இணைந்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Related posts

இன்றைய நாள் இராசி பலன்கள்

Tharani

இலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது!

G. Pragas

முன்னணி உறுப்பினரின் சுவரில் கோத்தாவின் போஸ்டர் ஒட்ட முயற்சி

G. Pragas