செய்திகள்மன்னார்

ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

தலைமன்னார் – ஊருமலை கடற்கரையில் 79 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று இரவு (14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது  ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 9.9 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகொன்றில் போதைப்பொருளை கொண்டு வந்த போது, 28 மற்றும் 36 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051