பிரதான செய்தி

800 மேலதிக பஸ்கள் சேவையில் இணைப்பு

இலங்கை போக்குவரத்து சபை மேலதிகமாக 800 பஸ்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

டயர்கள் மற்றும் ஏனைய உதிரி பாகங்களின் பற்றாக்குறை காரணமாக குறித்த பஸ்கள் கணிசமான காலம் நாடு முழுவதிலும் உள்ள டிப்போக்களில் இயங்காமல் இருந்ததாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பேருந்துகள் சரி செய்யப்பட்டு, நாடு முழுவதிலும் உள்ள 105 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும்.

தற்போது போக்குவரத்து முறைகள் இன்மையால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051