கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்தி

கனகாம்பிகைக்குளம் வான்பாயும் சாத்தியம்

கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கனகாம்பிகை குளத்தின்கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம், ஆனந்தபுரம் மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது பெய்துவரும் மழைகாரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்தால் கனகாம்பிகை குளம் வாய்பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

கனகாம்பிகை குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம், ஆனந்தபுரம் மக்கள் மற்றும் பரந்தன், உமையாள்புரம் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளம் ஏற்படாத வகையில் அருகிலுள்ள கழிவுகால்வாய்க்கால்களை சுத்தம் செய்து நீர் வழிந்தோடக் கூடியவகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282