பிரதான செய்தி

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு!

எரிபொருள் வரிசையில் மற்றுமொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று முதல் தனது லொறியில் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 12.30 அளவில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை அருகிலிருந்தவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், உயிரிழந்த நபர் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என உறவினர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214