செய்திகள்யாழ்ப்பாணம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட மாவட்ட செயலகமும் பாதுகாப்பு தரப்பினருமே காரணம்!

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலேயே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு.  கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இதுவரை காலமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினதும் கச்சேரியினதும் செயற்பாடுகளால் மக்களுக்கு உரிய முறையில் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியவில்லை.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்ப் பட்டியல் கையளிக்கப்பட்டு அதனை பகிர்ந்தளிக்க முற்பட்ட போதே பிரச்சினைகள் ஏற்பட்டது என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051