in ,

குடிதண்ணீருக்குத் தவிக்கும் அல்லிப்பளை கிராம மக்கள்!

குடிதண்ணீருக்குத் தவிக்கும் அல்லிப்பளை கிராம மக்கள்!

பளை, அல்லிப்பளைக் கிராம மக்கள் நீண்ட காலமாக குடிதண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளைக் கிராமம், கடற்கரையை அண்டிய கிராமமாகும். அந்தக் கிராமத்தில் தற்போது மக்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில், குடிதண்ணீர் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்தில் சில குடிதண்ணீர் கிணறுகள் காணப்பட்டாலும் அவற்றில் சிலவற்றில் தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கின்றது. ஏனைய கிணறுகளில் நீர் உவர்த் தன்மையுடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிரதேச சபைகள் போன்றவை குடிதண்ணீர் வழங்கின என்றும், தற்போது குடிதண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

நீர்வழங்கல் சபை குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றை விரைவுபடுத்தி, விரைவாகக் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

மது உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய உரிமையாளர்களாக சில அமைச்சர்கள்!