செய்திகள்தலைப்புச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி_ ரணில் விக்கிரமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கூடுதலாக உதவி வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து உதவி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதற்கு அமைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டத்தை வெற்றிகரமான முறையில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு, நிலையான கடன் திட்டம் என்பன பற்றிய அறிக்கையும் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டு நிதி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களை வரைந்து வருவதாகவும். இந்த அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051