in

ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை!

ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை!

சிகைத் திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானிலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தலிபான்கள் இந்தத் தடையை மீறுவோருக்கு தண்டனை விதிக்கப்படுமென தலிபான் அரசின் மதக் காவல்த்துறை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் இஸ்லாமியச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமையும் என அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

அனுமதிப்பத்திரமின்றி ’ட்ரோன்’ கமராவை பறக்கவிட்ட இருவர்  கைது!

’மருதனார்மடம் வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல்’ சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!