செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

இலங்கைக்கு  நிதியுதவிகளை வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவிப்பு!

இலங்கைக்கு  நிதியுதவிகளை வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவிப்பு!

திருப்தி அளிக்கக்கூடிய பொருளாதார கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவிகளை வழங்கும் திட்டம் இல்லையென உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, ஆழமான கட்டமைப்பு மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டுமென உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமது நிறுவனம் மிக உன்னிப்பாக கவனம் செலுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியை ஏற்படுத்தும் பொருட்டு, பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051