in ,

தாளையடி நயினாதீவில் குடி­தண்­ணீர்த் திட்­டத்தை ஆரம்­பிக்­கி­றார் பிர­த­மர்!

தாளையடி நயினாதீவில் குடி­தண்­ணீர்த் திட்­டத்தை ஆரம்­பிக்­கி­றார் பிர­த­மர்!

யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி பகு­தி­க­ளில் மூன்று லட்­சம் மக்­க­ளுக்கு (60 ஆயி­ரம் குடும்­பங்­க­ளுக்கு) ஒரு நாளைக்கு 24,000m3 சுத்­த­மான குடி­தண்­ணீ­ரைப் பெற்­றுக் கொடுக்­கும் இரண்டு பெரும் நீர்த்­திட்­டங்­க­ளின் மெய்­நி­கர் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் எதிர்­வ­ரும் 6ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

தாளை­ய­டி­யில் நிர்­மா­ணிக்­கப்­ப­டும் எஸ்.டபிள்யு.ஆர்.ஓ. கடல்­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் மற்­றும் நயி­னா­தீ­வில் முழு­மை­யாக நிறை­வு­செய்­யப்­பட்ட தண்­ணீர் விநி­யோ­கத் திட்­டம் ஆகி­ய­னவே அங்­கு­ரார்ப்­ப­ணம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இந்­தத்­திட்­டத்­தின் மூலம் தற்­போது 5 ஆயி­ரம் பய­னா­ளர்­க­ளுக்கு சுத்­த­மான தண்­ணீர் வழங்­கப்­ப­டு­கி­றது.

ஒரு லட்­சம் மக்­களை உள்­ள­டக்­கிய வகை­யில் யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி நீர் வழங்­கல் மற்­றும் சுகா­தா­ரத் திட்­டத்­தின் கீழ் 284 கிலோ­மீற்­றர் தூரத்­துக்கு குழாய்­களை அமைக்­கும் திட்­டம் உள்­ள­டக்­கிய யாழ். நகர விநி­யோ­கத் திட்­டம் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும். யாழ்.நகர விநி­யோ­கம் மற்­றும் தாளை­யடி எஸ்.டபிள்யு.ஆர்.ஓ. திட்­டங்­கள் 2023ஆம் ஆண்டு நிறை­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளன. இத­னூ­டாக மூன்று லட்­சம் பய­னா­ளர்­க­ளுக்கு சுத்­த­மான குடி­தண்­ணீர் பெற்­றுக் கொடுக்­கப்­ப­டும் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

வாளு­டன் ‘டிக்­டொக்’ இளை­ஞன் கைது சங்­கா­னை­யில் சம்­ப­வம்!

”சர்வதேசப் பொறிமுறைக்கு இலங்கையில் இடமில்லை” ஐ.நா. உள்­ளிட்ட அமைப்­பு­க­ளி­ட­மும் கூறி­விட்­டோம் என்­கி­றார் பீரிஸ்!