செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

தேசிய அடையாள அட்டை தொலைந்தால் ரூ 2,500 தண்டம்!

தேசிய அட்டையாள அட்டை காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அடையாள அட்டை காணாமற்போனதற்காக மீண்டும் விண்ணப்பிப்பவர்களிடம் 2 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படவுள்ளது.

15 வயது பூர்த்தியாகி ஒரு வருடத்துக்கு மேல் அடையாள அட்டையைப் பெறாமல் இருப்போர்,   குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19 (2) இன் கீழ் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் முடிவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கும் 2 ஆயிரத்து 500 ரூபா  அபராதம் அறவிடப்படவுள்ளது.

மேலும் ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்கள் உள்ளிட்ட போலியான சமர்ப்பிப்பு உட்பட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் 2ஆயிரத்து 500 ரூபா  அபராதம் விதிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.பீ.குணதிலக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266