எரிபொருள் நெருக்கடியால் மரணச் சடங்குகளை மேற்கொள்வதிலும் நெருக்கடி!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் இந்நிலை தொடருமானால், எதிர்வரும் நாட்களில் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையினால் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்வதிலும் பின்னர் வீடுகளுக்கு கொண்டு செல்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

தூர பிரதேசங்களில் வசிப்போரின் உறவினர்கள் நகர் பகுதிகளில் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களுடைய இறுதிக்கிரியைகளை நகரிலேயே செய்ய வேண்டிய நிலையும், இதனால் குடும்ப அங்கத்தவர்களுக்கு இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டினார்.

 

எரிபொருள் நெருக்கடியால் மரணச் சடங்குகளை மேற்கொள்வதிலும் நெருக்கடி!

Exit mobile version