செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

தமிழக மீனவர்கள் 7 பேருக்கு நிபந்தனைகளுடன் விடுதலை

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு நேற்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.கஜநீதிபாலன் மீனவர்கள் 7 பேரையும் நிபந்தனைகளுடன்  விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266