‘அரசாங்கம் பதவி விலக வேண்டும்’ யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்!

அரசாங்கம் பதவி விலக வேண்டும் யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்!

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உடன் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் யாழ் நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டீசல் இல்லை, பருப்புக்கு வரிசை ,அரிசிக்கு வரிசை, கோட்டா கோட்டா வீட்டுக்கு போ,, குடும்ப ஆட்சி உடைஞ்சு போச்சு இளைய தலைமுறை இறங்கியாச்சு, நாட்டில் மருந்து இல்லை உனக்கு எதுக்கு விருந்து, நாம் கற்பது நோயாளி இறப்பதைக் காணவா, முடக்காதே முடக்காதே நாட்டு மக்களை முடக்காதே,போதுமடா உங்கட ஆட்டம் இதுக்காடா ஓட்டு போட்டோம் , கோட்டா கோட்டா விட்டபோ திருடிய பணத்தை தந்துட்டுப்போ,அழிக்காதே அழிக்காதே ஜனநாயகத்தை அழிக்காதே! மருந்து இல்லாமல் நாட்டில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள் சுகாதார அமைச்சசே இது என்ன உங்களின் சதுரங்க ஆட்டமா என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக மாலை மூன்று முப்பது மணியளவில் ஆரம்பமாகிய பேரணி போதனா வைத்தியசாலை வீதியூடாக சத்திரச் சந்தியினை அடைந்து ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version