செய்திகள்யாழ்ப்பாணம்

மூதாட்டியை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை கோப்பாயில் துணிகரம்!

மூதாட்டியை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை கோப்பாயில் துணிகரம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரை
அச்சுறுத்தி பணம், நகை என்பன நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வீட்டுக்குள் இறங்கிய கொள்ளையர்கள் குறித்த வீட்டில் தனியாக வசித்துவரும் மூதாட்டியை அச்சுறுத்தி அவர் அணிந்துள்ள இரண்டு பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மூதாட்டியிடம் இருந்து 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939