திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த (16) அன்று ஹாட்வயார் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாக
பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் வவுனியா சாந்தசோலை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடிச்சென்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.