in

வடக்­கில் பாட­சா­லை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை! ஆசி­ரி­யர்­க­ளுக்கு விசேட பேருந்து!

வடக்­கில் பாட­சா­லை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை! ஆசி­ரி­யர்­க­ளுக்கு விசேட பேருந்து!

வடக்கு மாகா­ணத்­தில் 200 மாண­வர்­க­ளுக்கு உட்­பட்ட 680 பாட­சா­லை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்­கான பணி­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று வடக்கு மாகாண ஆளு­நர் திரு­மதி பி.எம்.எஸ் சாள்ஸ் தெரி­வித்­தார். வடக்கு மாகா­ணத்­தில் வெளி  ­மா­வட்­டங்­க­ளில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தனி­யான பேருந்து சேவையை வழங்­க­வும் அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

கல்வி அமைச்­சுக்­கும் மாகாண ஆளு­நர்­க­ளுக்­கும் இடையே இடம்­பெற்ற கூட்­டத்­தில் 200 மாண­வர்­க­ளுக்கு உட்­பட்ட தரம் ஒன்று தொடக்­கம் தரம் 5 வரை­யான ஆரம்ப பாட­சா­லை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணத்­தில் 200 மாண­வர்­க­ளுக்கு உட்­பட்ட 680 பாட­சா­லை­கள் உள்­ளன. அவற்றை உட­ன­டி­யாக ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மாகா­ணத்­தில் வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து பய­ணிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு வச­தி­யாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. கல்வி அமைச்­ச­ரி­டம் என்­னால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமைய போக்­கு­வ­ரத்து              அமைச்­ச­ரு­டன் பேசி அதற்­கான அனு­ம­தி­ கிடைத்துள்­ளது.
இதன்­மூ­லம் ஆசி­ரி­யர்­கள் சுகா­தார நடை­மு­றை­யின் கீழ் தமது பய­ணத்தை      மேற்­கொள்ள முடி­யும்.

மேலும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவ­சர சுகா­தார நட­வ­டிக்­கை­களை பயிற்­சி­ய­ளிக்க மாகாண சபை­யின் நிதி­யில் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்தை முன்­னெ­டுக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ளேன். மேலும் ஒட்­சி­மீற்­றர் உள்­ளிட்ட சுகா­தார உப­க­ர­ணங்­களைப் பெற்று ஒவ்­வொரு பாட­சா­லை­க­ளுக்­கும் வழங்க அதி­கா­ரி­க­ளுக்­குப் பணித்­துள்­ளேன் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு  தொடரும்!

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் நிரந்தர நியமனம் வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!