மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் அலுவலர் உட்பட
மூன்று பேர் அதிரடிக்கைது!
அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி மாடுகள் ஏற்றிச் சென்ற வாகனம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் இராணுவத்தினரிடம் சிக்கியது. அவற்றைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பொலிஸ் அலுவலர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி கடத்தல் முறியடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.