செய்திகள்

7 நாள்களில் மட்டும் 5,391 தொற்றாளர்கள்!

நாட்டில் கடந்த 7 நாள்களில் மட்டும் 5 ஆயிரத்து 391 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் முடிவடைந்த 7 நாள்களில் இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 87 இறப்புக்களும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைவாக நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் 6 லட்சத்து ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 932 பேர் குணமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994