in , ,

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14 வயது சிறுவர்கள்

மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14) இரவு தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவ தினமான நேற்று மாலை வீடு ஒன்றில், தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலத்தகாரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர். குறித்த இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுருவில் கடற்கரையில் கரையொதுங்கிய 32 அடி நீள திமிங்கலம்

பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை