இந்திய செய்திகள்உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய மற்றும் அரபு கட்டடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சகிப்புத்தன்மை, அமைதி, நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
ஜெபல் அலி பகுதியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதில் சிவன், கிருஷ்ணர், விநாயகர் மற்றும் மகாலட்சுமி உட்பட 16 இந்துக் கடவுளர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன கோவிலின் உள்பகுதியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

சனநெரிசலைக் கட்டுப்படுப்படுத்த QR குறியீடு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த பிரமாண்ட கோவில் கட்டடமானது 10 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, அதில் 300 உயர்தரத்திலான உணரும் கருவிகள் பொருத்தப்பட உள்ளது.

இந்தக் கருவிகள் புவிசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது. இந்தக் கருவியைக் கொண்டு, அந்த கட்டிடத்தின் அடுத்த 50 ஆண்டுகளில் ஏற்படும் அழுத்தம், தட்பவெப்பநிலை, கட்டிட உறுதித்தன்மை, விரிசல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266