செய்திகள்மலையகம்

எரிபொருள் வரிசையில் தொடரும் உயிரிழப்புகள்! 

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை-பொத்துவில் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

பொத்துவில் லகுகலையைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய 51 வயதுடைய திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலைப் பெறுவதற்குக்   காலையிலிருந்து காத்திருந்த குறித்த உத்தியோகத்தர்  திடீரென மயக்கமுற்று கீழே வீழுந்துள்ளார்.

அங்கு நின்றவர்களால் அவர்  பொத்துவில் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனையினர் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பொத்துவில் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப்  பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051