வாட்ஸ்அப் செயலியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பில் எழுந்த அச்சத்தை தொடர்ந்து கடந்த மூன்றே நாளில் (72-மணிநேரம்) டெலிகிராம் செயலியில் புதிதாக 2.5 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி அண்மையில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்தது.
இந்த மாற்றத்தால் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பிலான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளானது. தனிப்பட்ட தகவல்களை தாம் பார்க்க மாட்டோம், பகிரப்படாது என்றும் விளக்கமளித்தது.
இவ்வாறான நிலையிலேயே டெலிகிராம் பாவனையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமக்கு கடந்த ஆண்டில் இருந்து தினம் அதிக பயனர்கள் கிடைத்தே வருகின்றனர். ஆனால் 2.5 கோடி பயனர்கள் புதிதாக இணைந்தமை வித்தியாசமானது என டெலிகிராம் தெரிவித்துள்ளதாம்.