செய்திகள் விளையாட்டு

73 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், 2வது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து 73 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ஓட்டங்கள் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகள் ஓட்டங்களையும் (6,996 ஓட்டங்கள்) முந்தினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே தங்களது 134 வது மற்றும் 136 வது இன்னிங்ஸ்களில் 7,000 ஓட்டங்கள் கடந்தனர். விராட் கோலி மற்றும் இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா ஆகியோர் தங்களது 138 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தனர். 

சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சார்ட்ஸ் தனது 140 வது இன்னிங்சில் 7,000 ஓட்டங்கள் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் பலி!

G. Pragas

கொடிகாமத்தில் வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!

G. Pragas

பலமான காற்று வீசும் – பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

Tharani

Leave a Comment