in ,

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் நிரந்தர நியமனம் வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் நிரந்தர நியமனம் வழங்குமாறு
வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

நிரந்­தர நிய­ம­னம்­கோரி ஒன்­றி­ணைந்த பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தி­னர் வவு­னியா பிர­தேச செய­ல­கத்­துக்கு முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.
இதன்­போது, காலத்தை வீண­டிக்­காதே, நிரந்­தர நிய­ம­னத்தை உடன் வழங்கு, கதைத்­தது காணும் உறுதி மொழியை நிறை­வேற்று, 20 ஆயி­ரம் ரூபா வாழ்க்­கைச் செல­வுக்கு போதுமா? போன்ற வாச­கங்­கள் எழு­தப்­பட்ட பாதா­கை­களை ஏந்­தி­ய­வாறு, கோசங்­களை எழுப்­பி­ய­வா­றும் பட்­ட­தா­ரி­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கருத்து தெரி­விக்­கை­யில்,
“பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஒரு­வ­ருட பயிற்­சிக்­கா­லம் நிறை­வ­டைந்­தும் அரசு சரி­யான நிய­ம­னத்தை வழங்­க­வில்லை. செப்­ரெம்­பர் 03ஆம் திகதி ஒரு­வ­ருட பயிற்­சிக்­கா­லம் முடி­வ­டைந்த பின்­ன­ரும் எமக்­கான நிய­ம­னம் வழங்­கப்­ப­டா­மல் இருப்­பது வேத­னைக்­கு­ரிய விட­ய­மா­கும். பட்­ட­தாரி பயி­லு­நர்­கள் சுகா­தார மருத்­துவ அதி­காரி அலு­வ­ல­கம் மற்­றும் சமுர்த்தி போன்­ற­வற்­றுக்கு வாரத்­தில் 07 நாள்­க­ளும் எது­வித மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளு­மின்றி அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர். இது பெரும் குறை­பா­டாக இருக்­கின்­றது.

தற்­போ­தைய நாட்­டின் பொரு­ளா­தார நிலை­மை­யில் 20 ஆயி­ரம் ரூபா­வைக் கொண்டு எவ்­வாறு ஒரு குடும்­பத்தை கொண்டு நடத்த முடி­யும்?.
இந்­த­நி­லை­யில் தற்­போ­தைய வேடிக்­கை­யான அரசு, எங்­க­ளின் பயிற்­சிக்­கா­லத்தை 20 ஆயி­ரம் ரூபா கொடுப்­ப­ன­வு­டன் மேலும் 06 மாதங்­க­ளுக்கு நீடித்­தி­ருப்­ப­தா­னது எங்­க­ளது வாழ்க்­கை­யில் மேலும் கஸ்­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்­கின்­றது.

பல்­வேறு போரா­டங்­க­ளின் ஊடா­கக் கிடைக்­கப்­பெற்ற இந்த நிய­ம­னத்தை ஒரு வரப்­பி­ர­சா­த­மாக நினைத்­துக்­கொண்டு இருந்­தோம். ஆனால், இந்த அரசு எங்­களை கஸ்­டத்­துக்­குள்­ளாக்கி போராட்­டங்­களை தொட­ரு­வ­தற்கு தள்­ளி­யுள்­ளது.எனவே இந்த அரசு கொடுத்த வாக்­கு­று­திக்கு ஏற்ப செப்­ரெம்­பர் 03 என்ற திக­தி­யின் படி எங்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.” என்று தெரி­வித்­த­னர்.

வடக்­கில் பாட­சா­லை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை! ஆசி­ரி­யர்­க­ளுக்கு விசேட பேருந்து!

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51வீத பங்குகள் ’அதானி’ நிறுவனத்திற்கு 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது