கிளிநொச்சியில் வீதியை மறித்து போராட்டம்!

கிளிநொச்சியில் வீதியை மறித்து போராட்டம்!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில் நேற்றிரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் வந்தும் வாகனங்களுக்கு வழங்காமையால் வாகன சாரதிகள் வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, அவசர நிலை உள்ளபோது வீதியை மறிக்க வேண்டாம் என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உயர் அதிகாரிகளோடு மாவட்ட செயல மேலதிக அரசாங்கதிபர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதை தொடர்ந்து 5000 ரூபாய்க்கு டீசல் விநியோகிக்கப்பட்டது.

Exit mobile version