பிரதான செய்தி

ஆரியகுளத்தில் வாண வேடிக்கைகளுடன் இன்று விசேட நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழாவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆரியகுளத்தில் இன்று(02) வெள்ளிக்கிழமை மாலை 6.30மணி முதல் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆரியகுளத்தின் மையப்பகுதியிலே அமைக்கப்பட்ட விசேட அரங்கிலே கலை நிகழ்வுகள், வாண வேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் 2021 டிசம்பர் 2ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282