பிரதான செய்தி

இலங்கையில் அடுத்தடுத்து சூட்டுச் சம்பவங்கள் பதிவு

லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் , காலி – அஹங்கம கொவியாபான பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196