பிரதான செய்தி

மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை பலி!

ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பர்னபியில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய பக்கீர் ஜுனைதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொலம்பியாவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள நீர்த்தேக்கத்தில் தனது குடும்பத்துடன் படகில் சென்றவேளை, தண்ணீருக்குள் விழுந்த அவருடைய மகனை காப்பாற்ற நீர்த்தேக்கத்தினுள் குதித்துள்ளார்.

இந்நிலையில், அங்கே நடந்த குழப்பத்தைக் கண்ட சிலர் உடனடியாக அவரது மகனை காப்பாற்றிய வேளை, தந்தையை உயிரிழந்துள்ளார்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051