செய்திகள்யாழ்ப்பாணம்

எரிபொருள் இன்மையால் காரைநகர் – ஊரகாவற்றுறை பாதைச் சேவை பாதிப்பு!

எரிபொருள் இன்மையால் காரைநகர் – ஊரகாவற்றுறை
பாதைச் சேவை பாதிப்பு!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994