செய்திகள்யாழ்ப்பாணம்

வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரிகள் முன்னிலையில் இன்று (11.05.2022) சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உரைப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் இனங்காணப்பட்டதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ,எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939