செய்திகள்தலைப்புச் செய்திகள்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது என்கிறார் சிறீதரன்!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது என்கிறார் சிறீதரன்!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் குறிப்பாக விக்னேஸ்வரன் ஐயா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

தமிழ் மக்கள் அன்றாடம் சந்தித்து வருகிற முக்கியமான பிரச்சனைகளான அரசியல் கைதிகளுடைய விடுதலை. அத்தோடு காணி விடயங்களில் அதிக அக்கறையை அரசாங்கம் செலுத்த வேண்டும். மக்களுடைய அன்றாட பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்பது தொடர்பில் பரிசீலிக்கலாம்.

இன்று வடக்கு ஆளுநருடைய செயற்பாடு மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து வடக்கு ஆளுநர் அலுவலகத்தினால் கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன. ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும். இது ஒரு கண் துடைப்புக்கு மக்களை ஏமாற்றுவதற்காக வேண்டி அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும்

இலங்கையினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும். பொருளாதார பிரச்சனை என்பது வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கும்.

ஆனால் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை ஏற்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அனைவருடனும் பேசி ஒரு தீர்வினை எடுப்போம் என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214