கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி
பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்!
கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசிங்க, பதவித்தரம் குறைக்கப்பட்டு, களனி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவருடைய வேலைகள், நடவடிக்கைகளில் திருப்தி இன்மை காரணமாக உயரதிகாரிகளால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவந்த முறைப்பாடுகளையடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினரால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அவர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு ‘சூப்பர் நியூமரரி நிலை’ என்ற வகையில் களனி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை வீரசிங்க தட்டிக்கழித்து வந்தார் என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.