கீரிமலை புதிய கொலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சங்கிலியன் நடராசா என்கிற 63 வயதான நபரே உயிரிழந்தவராவார்.
உயிரிழப்பு கொலை என்கிற ரீதியில் காங்கேசன்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்