கிழக்கு மாகாணம்செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

உவந்தமலை முருகன் ஆலய சிலை நிர்மாணப்பணி நிறுத்தம்

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலைக்கான நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த வன ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

அத்திவாரம் அமைக்கப்பட்டு பீடம் எழுப்பப்பட்ட நிலையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 18 அடி உயரமான முருகன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பமானது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்ட இந்த நிர்மாணப்பணிகளுக்கு தற்போது கொழும்பு தலைமையகத்தில் இருந்து இத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்ட உகந்தைமலை முருகன் ஆலயம் மலைகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட ஒரு பழமையான ஆலய நிர்மாணப் பணிகள் காரணமெதுவுமின்றி இடைநிறுத்தப்பட்ட இந்தச் செயல் முழு இந்துக்களின் மனங்களையும் புண்பட செய்துள்ளது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர் தலையீடு செய்து மிக விரைவாக அனுமதியை வழங்கி மீள் நிர்மாணப் பணியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266