செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ் போதனா மருத்துவமனைக்கு 20மில்லியன் மருத்துவ உதவி வழங்கிய CMC!

யாழ் போதனா மருத்துவமனைக்கு 20மில்லியன் மருத்துவ உதவி வழங்கிய CMC!

இலங்கையில் மருத்துவ பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்
இந்தியாவின் வேலூர், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது தடவையாக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கணிசமான அளவு மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

CMC இன் இயக்குனர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் மற்றும் டாக்டர் தாமஸ் ராம் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்கள் டாக்டர்.தயாளன் அம்பலவாணரால் (CMC இன் பழைய மாணவர்) யாழ் போதனா மருத்துவமனையின் துணை இயக்குனர் டாக்டர்.ஜமுனானந்தவிடமும் மாகாண அமைச்சுக்கான பொருட்கள் அவர்களின் தலைமை மருந்தாளுனர் திருமதி கிருஷ்ணவேணியிடம் கையளிக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282