in , ,

78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் தீயில் சங்கமம்!

மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்திருந்த தமிழ்த் திரை உலகின் நகைச்சுவை நடிகர் ‘சின்னக் கலைவாணர்’ விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க பூரண பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவேக்கின் உடல் காலை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பரம்பல் அச்சுறுத்தலையும் கடந்து காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதியில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு அமைவாக, நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க பொலிஸ் மரியாதை அளிக்கப்பட்டு பொலிஸார் சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

துறைமுக நகரம் சீனாக்கு சொந்தமாகாது – அரசாங்கம்

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக துறைமுக நகர் இருந்தால் எதிர்ப்போம்!