in ,

பூவரசங்குளத்தில் பெருமளவில் காடழிப்பு! கண்டுகொள்ளாத வனத்துறை!

பூவரசங்குளம் பகுதியில் பெருமளவில் காடழிப்பு! மக்கள் குடியேறினால் அராஜகம் செய்யும் வனத்துறையினர் இதைக் கண்டுகொள்ளாதது ஏன்?

மக்­கள் வாழும் கிரா­மங்­க­ளுக்­குச்­ சென்று அவர்­கள் வாழும் இடம் வனப்­ப­கு­திக்­குச் சொந்­த­மானது எனத் தெரி­வித்து குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளில் எல்­லைக்­கல்­லி­டும் வனத்­து­றை­யி­னர், அதை­விட பெரி­ய­ள­வில் வவு­னியா பூவ­ர­சங்­கு­ளம் பகு­தி­யில் பிற இடத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வந்து காடு வெட்டி அழித்­து­வ­ரு­வ­தைக் கண்­டு­கொள்­ளா­தது ஏன்? என கிராம மக்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

வவு­னியா பூவ­ர­சங்­கு­ளம் பகு­தி­யில் சிலர் காடு­ அழிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டு­வ­ரும்­நி­லை­யில், வனத்­து­றை­யி­னர் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது வாளா­வெட்­டி­யா­க­வுள்­ள­னர் என்று பிரதேச மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.
பூவ­ர­சங்­கு­ளம் வடக்கு பகு­தி­யில் குளத்­துக்­குச் சொந்­த­மான நீரேந்து பகு­தி­கள் மற்­றும் காட்­டுப்­ப­கு­தி­யைச் சேர்ந்த நிலப்­ப­ரப்­பில் மரங்­கள் வெட்டி அழிக்­கப்­பட்­டுள்­ளன.
இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குறித்த பகு­தி­யில் 60 ஏக்­க­ருக்­கும் அதி­க­மான காடு­கள் அழிக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் கடந்த ஆறு மாதங்­க­ளாக காட­ழிப்பு இடம்­பெற்று வரு­கின்­றது.

எனி­னும், வனத்­து­றை­யி­னர் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­­க­வில்லை.
காட­ழிப்பு மற்­றும் குளம் சார்ந்த நிலங்­கள் அப­க­ரிப்பு தொடர்­பாக, கம­நல சேவை­கள் திணைக்­க­ளம் உட்­பட ஏனைய திணைக்­க­ளங்­க­ ளின், அதி­கா­ரி­கள்­கூட இவற்­றைக் கண்­டு­கொள்­ள­வில்லை என கிராம மக்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.
பூவ­ர­சங்­கு­ளத்­தில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலப்­ப­கு­தி­யில் சட்­ட­வி­ரோ­த­மாக வேலி­கள் அமைக்­கப்­பட்டு பல ஏக்­கர் காணி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த காட­ழிப்பு நடை­பெற்று நிலங் கள் உழவு இயந்­தி­ரங்­கள் மூலம் உழவு மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றது. கொரோனா முடக்க காலத்­தைப் பயன்­ப­டுத்தி காணி ஆக்­கி ­ர­மிப்­பா­ளர்­கள் காட்­டு­ம­ரங்­களை வெட்­டிக் கடத்­து­கின்­ற­னர். மரங்­க­ளுக்கு தீயிட்டு அழித்து வரு­கின்­ற­னர்.
பூவ­ர­சங்­கு­ளத்தை அண்­டிய பகு­தி­யில் காட­ழிப்பு நடை­பெற்­றுக் கொண் டி­ருக்­கும் இந்­தத்­த­ரு­ணத்­தில், வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தலை­யிட்டு, வேற்று பிர­தேச நபர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் நில ஆக்­கி­ர­மிப்பை தடுத்து நிறுத்த வேண்­டும் என கிராம மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இலங்கையில் முகக்கவசத்தால் பரவும் மற்றொரு தொற்று!

குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு: தோண்டியெடுக்கப்பட்ட ஜனாஸா!