in , ,

வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

. திருகோணமலை  கன்னியா, விளாங்குளம் பீலியடி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

பிரதான சந்தேகநபரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே  இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த இளைஞனே பிரதான சந்தேகநபருக்கு குண்டை வடிவமைக்க உதவியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டு ஒன்று  மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பொதுமக்கள், கிராமசேவகர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்!

யாழிலிருந்து கொழும்பிற்கு கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!