செய்திகள்யாழ்ப்பாணம்

வடமாகாண ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடினால் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் போராடுவோம்!

வடமாகாண ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவராக இருந்தால் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் போராடுவோம்! என தமிழ் தேசிய கட்சியின் பிரச்சார செயலாளர் ஜெனார்த்தனன்
தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாநகரசபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். புராதன காலத்திலிருந்து யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசார தலைநகராக காணப்படுகிறது . இதில் ஆளுநரின் தலையீடு என்பது,வெறுமனே யாழ் மாநகரசபையுடன் முரண்படுவது என்பதைத் தாண்டி தமிழ் மக்களின் உணர்வுகளுடன் முரண்படுகிறார் என்றே கூறமுடியும்.

பௌத்த சிங்கள தரப்பினருடன் ஊடாடுவதை விட பௌத்த சிங்கள தரப்பினருக்கு விசுவாசமாக செயற்படும் தமிழர்களுடன் ஊடாடுவது சற்று கடினமானதாக உள்ளதாக தெரிவித்தார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266