in

அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா பிரதிநிதி கண்டனம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்­கு கடந்த 12ம் திகதி சென்ற சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு இரா­ஜாங்க அமைச்­சர் அங்கு தமிழ் அர­சி­யல் கைதி­களை முழந்­தா­ளிட வைத்து துப்­பாக்கி முனை­யில் அச்­சு­றுத்­தல் விடுத்­தமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சரைக் கைது செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்!

இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டிற்கு சீனா எதிர்ப்பு!