செய்திகள்

8000 கோடி ரூபாய் நீதியை அமுல்படுத்த அனுமதி

இலங்கையின் போக்குவரத்துத்துறை மேம்படுத்த மிலேனிய சவால்கள் ஒத்துழைப்பு அமைப்பினால் வழங்கப்பட்ட 480 மில்லியன் அமெரிக்க டொலர் ( 8000 கோடி ரூபாய்) நிதியை அமுல்படுத்த இன்று (29) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் நிதியமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் அதன் பின்னர் இது 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் செயல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன இந்த உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்திருந்திருந்தார்.

இதனை அடுத்து உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் சாதகமாக பரிசீலிக்குமாறு அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கடந்த யூலை மாதம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுசி ஆடையகம் தீ விபத்தில் எரிந்து நாசம்!

G. Pragas

தர்பார் படத்தின் புதிய போஸ்டர்

Bavan

2ம் கட்ட சமுர்த்தி நிதி கட்டாயம் வழங்கப்படும்

G. Pragas