செய்திகள் விளையாட்டு

இலங்கையை தோற்கடித்து! தொடரை வென்றது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 59.3 பந்து பரிமாற்றத்தில் 191 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக அசாட் சாபிக் 63, பாபர் அசாம் 60 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லகிரு குமார 18 ஓவர்கள் பந்து வீசி 49 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளையும், லசிட் அம்புல்தெனிய 20.3 ஓவர்கள் பந்து வீசி 71 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இனிங்ஸுற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 85.5 பந்து பரிமாற்றத்தில் 271 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக டினேஸ் சந்திமால் 74 ஒட்டங்களையும், டில்றுவான் பெரேரா 48 ஒட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சகீன் அப்ரிடி 26.5 ஓவர்கள் பந்து வீசி 77 ஓட்டங்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளையும், மொகமது அப்பாஸ் 27 ஓவர்கள் பந்து வீசி 55 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாம் இனிஸ்சிற்காக களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 131 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 555 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடை நிறுத்தினர் . இதில் அணி சார்பாக 4 சதங்கள் பெறப்பட்டுள்ளது. அபிட் அலி 174 ஓட்டங்களையும், சன் மசூட் 135 ஒட்டங்களையும், அசார் அலி 118 ஒட்டங்களையும், பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 100 ஒட்டங்களையும் பெற்றார்கள்.

அதன்படி, இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 62.5 பந்து பரிமாற்றத்தில் 212 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அணி சார்பாக ஒசாட பெர்னாண்டோ 102 ஒட்டங்களையும், நிரோசன் டிக்வெல்ல 65 ஒட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக நசீம் ஸா 12.5 ஓவர்கள் பந்து வீசி 31 ஓட்டங்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளையும், யசீர் ஸா 20 ஓவர்கள் பந்து வீசி 84 ஓட்டங்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சகீன் அப்ரிடி மொகமது அப்பாஸ் கரிஸ் சொகைல் அகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் அபிட் அலி தெரிவானார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் முதலாவது போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

உலக வங்கியின் நிதி உதவி

Tharani

புகையிரத வெள்ளோட்டம்

Tharani

பாம்பு கடித்து ஒருவர் பலி

கதிர்